புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்றும் தீக்கரையாகியுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சிலாபம் பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது, முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி , கவிழ்ந்து பின்னர் முழுமையாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறுகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படடுத்திய பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரங்குளி விபத்தில் தீப்பிடித்து எரிந்து நாசமான முச்சக்கர வண்டி. புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் மதுரங்குளி 10 ஆம் கட்டைப் பிரதேசத்தில் நேற்றையதினம்(10) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டியொன்றும் தீக்கரையாகியுள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, சிலாபம் பிரதேசத்தில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை முந்திச் செல்ல முற்பட்ட போது, முச்சக்கர வண்டியுடன் பஸ் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டி வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதி , கவிழ்ந்து பின்னர் முழுமையாக தீக்கரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் சிறுகாயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படடுத்திய பின்னர், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.