ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவா சாம்கி பகுதியில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து நேற்றையதினம்(27) மாலை இடம்பெற்றது.
இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
'யூரோசிட்டி 279' என்ற பெயரிடப்பட்ட ரயில், பிராட்டிஸ்லாவாவின் தலைநகரைக் கடந்து எல்லையைக் கடந்து ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டுக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
புகையிரத விபத்து சமிக்ஞை அமைப்பு பழுதடைந்தமையினாலும், புகையிரத கடவையின் கதவுகள் மூடப்படாததினாலும் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பேருந்தை மோதித்தள்ளிய புகையிரதம். ஆறு பயணிகள் பரிதாப மரணம். தீப்பற்றிய புகையிரத எஞ்சின். ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோவா சாம்கி பகுதியில் பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.குறித்த விபத்து நேற்றையதினம்(27) மாலை இடம்பெற்றது.இந்த விபத்தில் மேலும் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.'யூரோசிட்டி 279' என்ற பெயரிடப்பட்ட ரயில், பிராட்டிஸ்லாவாவின் தலைநகரைக் கடந்து எல்லையைக் கடந்து ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டுக்குச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.பஸ்ஸுடன் மோதிய புகையிரத இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததுடன் புகையிரத சாரதி தீயில் சிக்கி தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.புகையிரத விபத்து சமிக்ஞை அமைப்பு பழுதடைந்தமையினாலும், புகையிரத கடவையின் கதவுகள் மூடப்படாததினாலும் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.