• May 03 2024

வெடுக்குநாறிமலை விவகாரம்; ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம்..!

Chithra / Mar 12th 2024, 12:31 pm
image

Advertisement


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று  வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த  9 ஆம் திகதி  மாலை முன்னிலைப்படுத்தினர். 

இதன்போது குறித்த 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும்  நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.

வெடுக்குநாறிமலை விவகாரம்; ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பம். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் இன்று  வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், இன்று  வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது சப்பாத்துக் கால்களுடன் ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கடந்த  9 ஆம் திகதி  மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது குறித்த 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.இதன்போது அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டமை தொடர்பில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் தற்போது குறித்த வழக்கு மீதான விசாரணை வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வருவதுடன், சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் ஆகியோரும்  நீதிமன்றுக்கு சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement