• May 04 2024

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவி...! ஏழுபேர் களத்தில்...!

Sharmi / Mar 12th 2024, 12:30 pm
image

Advertisement

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை,  குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின்  சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த மாதம் 08 ஆம் திகதி விடுத்திருந்தார்.

அதனடிப்படையில், தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்துள்ளனர்.

புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விஷேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன்  அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவி. ஏழுபேர் களத்தில். தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்காக ஏழுபேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,தென்கிழக்கு பல்கலைக்கழக தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கரின் முதலாவது மூன்றாண்டு பதவிக்காலம் எதிர்வரும் 2024.08.08 ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற அதேவேளை,  குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபத்துக்கமைய பல்கலைக்கழக பேரவையின்  சார்பில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் விண்ணப்பங்களுக்கான அழைப்பை கடந்த மாதம் 08 ஆம் திகதி விடுத்திருந்தார்.அதனடிப்படையில், தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராசிரியர் எப். ஹன்ஸியா றவூப், பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன், பேராசிரியர் எம்.வி.எம். இஸ்மாயில், பேராசிரியர் ஏ.எம். முஸாதிக் மற்றும் கலாநிதி ஏ.சி.எம். ஹனஸ் உள்ளிட்ட ஏழுபேர் விண்ணப்பித்துள்ளனர்.புதிய உபவேந்தர், பல்கலைக்கழக பேரவையின் விஷேட ஒன்றுகூடல் ஒன்றின் ஊடாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 03/2023 ஆம் இலக்க சுற்றுநிருபத்தில் கூறப்பட்டுள்ளதன்  அடிப்படையில் பேரவை உறுப்பினர்கள், விண்ணப்பதாரிகளுக்கு ஏழு அளவுகோல்களின் (Criteria) கீழ் புள்ளிகள் இட்டு, பெற்ற அதிகூடிய புள்ளிகள் அடிப்படையில் மூவரை தெரிவு செய்வர். குறித்த மூவரில் ஒருவரை ஜனாதிபதி உபவேந்தராக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement