• May 19 2025

கொட்டாஞ்சேனை மாணவியின் தீர்ப்பு அனைத்து மாணவிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்- ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்து..!

Sharmi / May 19th 2025, 2:05 pm
image

கொட்டாஞ்சேனை மாணவிக்கு வழங்கப்படும் நியாயமான தீர்ப்பால் இலங்கையில் உள்ள அனைத்து மாணவிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.  

இதன்போது கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை மாணவியின் தீர்ப்பு அனைத்து மாணவிகளது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்- ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்து. கொட்டாஞ்சேனை மாணவிக்கு வழங்கப்படும் நியாயமான தீர்ப்பால் இலங்கையில் உள்ள அனைத்து மாணவிகளதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்  ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பு - கொட்டாஞ்சேனையில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.  இதன்போது கொட்டாஞ்சேனை மாணவிக்கு நீதி கோரி நீதிமன்றத்திற்கு முன் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement