இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை நாட்டை வந்தடைந்தார்.
இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான INDIA - 01 எனும் விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் மேலும் 49 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.
விமான நிலையத்தின் அதிவிசேட விருந்தினர் முனையத்திற்கு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதியை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை வந்தடைந்தார் இந்தியத் துணை ஜனாதிபதி இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை நாட்டை வந்தடைந்தார். இன்றைய தினம் காலை 09.30 மணியளவில் இந்திய விமான சேவைக்கு சொந்தமான INDIA - 01 எனும் விசேட விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் மேலும் 49 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவினரும் வருகை தந்துள்ளனர்.விமான நிலையத்தின் அதிவிசேட விருந்தினர் முனையத்திற்கு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதியை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார் கமகே உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று உத்தியோகபூர்வமாக வரவேற்றனர்.இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவது குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.