மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தை இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி அதில் பொருத்தப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது
காப்பகத்தில் சிறார்களுக்காக இரசாயன மருந்து பாவிக்க படாமல் நாட்டபட்டிருந்த தாவரங்கள் மற்றும் மரக்கன்று என்பன பிடுங்கி எரிய பட்டு உள்ளதாகவும் காப்பகத்தின் பணியாளர் திருமதி. திலகவதி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்பட்ட சிறுவர் காப்பகத்தை தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் போன்ற நிறுவனங்கள் உதவியுடன் சிறுவர்களின் நலன் கருதி சீர் செய்து தரப்பட்டு இன்னும் சில தினங்களில் அதற்கான மின்சார வசதி பெற்று தர தோட்ட நிர்வாகம் முன் வந்துள்ள நிலையில்
இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மட்டில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.
மேலும் குறித்த பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் குழாய்களும் அடிக்கடி களவாடபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட விஷமிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சிறுவர் காப்பகத்தை நாசமாக்கிய விசமிகள்- தொடரும் அடாவடி மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை மல்லியப்பூ தோட்டத்தில் உள்ள சிறுவர் காப்பகத்தை இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி அதில் பொருத்தப்பட்டிருந்த கதவு மற்றும் ஜன்னல் போன்றவற்றை சேதப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளதுஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது காப்பகத்தில் சிறார்களுக்காக இரசாயன மருந்து பாவிக்க படாமல் நாட்டபட்டிருந்த தாவரங்கள் மற்றும் மரக்கன்று என்பன பிடுங்கி எரிய பட்டு உள்ளதாகவும் காப்பகத்தின் பணியாளர் திருமதி. திலகவதி தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த காலத்தில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்பட்ட சிறுவர் காப்பகத்தை தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் போன்ற நிறுவனங்கள் உதவியுடன் சிறுவர்களின் நலன் கருதி சீர் செய்து தரப்பட்டு இன்னும் சில தினங்களில் அதற்கான மின்சார வசதி பெற்று தர தோட்ட நிர்வாகம் முன் வந்துள்ள நிலையில்இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மட்டில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் குறிப்பிடுகின்றார்.மேலும் குறித்த பகுதியில் தொழிலாளர் குடியிருப்புகளுக்கு செல்லும் தண்ணீர் குழாய்களும் அடிக்கடி களவாடபட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட விஷமிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.