• Apr 18 2025

வவுனியாவிற்கு விஜயம் செய்த மகளிர் விவகார அமைச்சர்

Thansita / Feb 26th 2025, 10:06 pm
image

மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இன்று  வவுனியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினருடனான சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பானது வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அமைச்சரிடம் வவுனியா மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பெண்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், கோரிக்கை கடிதங்களும் கைகயளிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஊடாக அமைச்சர் பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டிருந்தார்.

குறித்த சந்திப்பில் வவுனியா மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவிற்கு விஜயம் செய்த மகளிர் விவகார அமைச்சர் மகளிர் விவகார அமைச்சர் சரோஜினி போல்ராஜ் இன்று  வவுனியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டிருந்ததுடன், தேசிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினருடனான சந்திப்பொன்றினையும் மேற்கொண்டிருந்தார்.குறித்த சந்திப்பானது வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.இதன்போது அமைச்சரிடம் வவுனியா மாவட்டத்தில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக பெண்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன், கோரிக்கை கடிதங்களும் கைகயளிக்கப்பட்டிருந்தன.இதேவேளை பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஊடாக அமைச்சர் பொன்னாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டிருந்தார்.குறித்த சந்திப்பில் வவுனியா மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொது அமைப்புக்களை சேர்ந்த பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement