• Apr 15 2026

ஈரானுடனான போர் முடியும் தருவாயில்! - ட்ரம்ப் அறிவிப்பு! மீண்டும் பேச்சுவார்த்தை?

Chithra / Apr 15th 2026, 9:14 am
image

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 


பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், என்று அவர் அந்த அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். 


அமெரிக்கா இப்போது பின்வாங்கினால், ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். 


நாங்கள் இன்னும் வேலையை முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.


இதேவேளை போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் இந்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. 


இதற்காக இரண்டு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. 


அந்த பேச்சுவார்த்தையில் யுரேனியம் செறிவூட்டலை 20 வருடங்களுக்கு நிறுத்த வேண்டும் என அமெரிக்கா ஈரானிடம் கோரிக்கை விடுத்தது. 


எனினும் 5 வருடங்களுக்கு மாத்திரமே யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைப்பதற்கான உடன்பாட்டை ஈரான் வௌிப்படுத்தியிருந்தது. இதனால் குறித்த பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவுக்கு வந்தது. 


இந்நிலையில் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்தியஸ்த்தம் வகிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. 


குறித்த சூழலில் இந்த வாரம் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என ரொயிட்டர்ஸ் கூறியுள்ளது.

ஈரானுடனான போர் முடியும் தருவாயில் - ட்ரம்ப் அறிவிப்பு மீண்டும் பேச்சுவார்த்தை ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன், என்று அவர் அந்த அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா இப்போது பின்வாங்கினால், ஈரான் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 20 ஆண்டுகள் ஆகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார். நாங்கள் இன்னும் வேலையை முடிக்கவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம், என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஈரான் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வமாக இருப்பதாக தாம் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி  வலியுறுத்தியுள்ளார்.இதேவேளை போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்காவும் ஈரானும் இந்தவாரம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் வாய்ப்புள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. இதற்காக இரண்டு நாடுகளின் உயர் மட்டக் குழுவினர் மீண்டும் இஸ்லாமாபாத் திரும்பக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது. அந்த பேச்சுவார்த்தையில் யுரேனியம் செறிவூட்டலை 20 வருடங்களுக்கு நிறுத்த வேண்டும் என அமெரிக்கா ஈரானிடம் கோரிக்கை விடுத்தது. எனினும் 5 வருடங்களுக்கு மாத்திரமே யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தி வைப்பதற்கான உடன்பாட்டை ஈரான் வௌிப்படுத்தியிருந்தது. இதனால் குறித்த பேச்சுவார்த்தை எவ்வித இணக்கப்பாடுகளும் இன்றி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இரண்டாவது தடவையாகவும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்தியஸ்த்தம் வகிக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தது. குறித்த சூழலில் இந்த வாரம் மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெறலாம் என ரொயிட்டர்ஸ் கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement