• Dec 05 2024

மீண்டும் 'ஹெக்' செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம்!

Chithra / Dec 4th 2024, 12:41 pm
image


வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது.

அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,

இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி மேற்படி இணையம் ஹெக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாரணைகளின்படி வெளி தரப்பினரால் இணையத்தளத்தின் எந்த தரவுகளும் அணுகப்படவில்லை அல்லது திருடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் 'ஹெக்' செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது.அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னதாக நவம்பர் 12ஆம் திகதி மேற்படி இணையம் ஹெக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.முதற்கட்ட விசாரணைகளின்படி வெளி தரப்பினரால் இணையத்தளத்தின் எந்த தரவுகளும் அணுகப்படவில்லை அல்லது திருடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் மீண்டும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்துக்கான அணுகல் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement