• Nov 14 2024

ஆலயத்திற்கு சென்றுவந்த 'கேப்'பில் வீடு உடைத்து திருட்டு! மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பில் துணிகரம்

Chithra / Jun 7th 2024, 10:51 am
image

 மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.

புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், 

குறித்த வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

அதன்பின் ஆலயத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது  படுக்கை அறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு,

அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.

மதில் பகுதியால் பாய்ந்து வந்து, மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிற்குள் புகுந்து இந்த கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆலயத்திற்கு சென்றுவரும் நேரம் கவனிக்கப்பட்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்,

இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


ஆலயத்திற்கு சென்றுவந்த 'கேப்'பில் வீடு உடைத்து திருட்டு மோப்ப நாயுடன் களமிறங்கிய பொலிஸார் மட்டக்களப்பில் துணிகரம்  மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இரவு பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன.புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு பின்புறமாகவுள்ள வீடு ஒன்றிலேயே இந்த துணிகரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலய திருச்சடங்கு நடைபெற்றுவரும் நிலையில், குறித்த வீட்டிலிருந்தவர்கள் வீட்டை பூட்டி சாவியை வீட்டின் அருகில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர்.அதன்பின் ஆலயத்திற்கு சென்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது  படுக்கை அறையிலிருந்த அலுமாரி உடைக்கப்பட்டு,அதிலிருந்த 17 இலட்சத்து 50ஆயிரம் ரூபா பணமும், நான்கரை பவுண் தங்கமும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடிச் செல்லப்பட்டுள்ளது.மதில் பகுதியால் பாய்ந்து வந்து, மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டிற்குள் புகுந்து இந்த கொள்ளை இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இது தொடர்பில் மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மேலும் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.ஆலயத்திற்கு சென்றுவரும் நேரம் கவனிக்கப்பட்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும்,இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement