இளைய தலைமுறையினரை சமூகத்துடன் இணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் நேற்றையதினம்(08) மாலை இடம்பெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த எமது நாடு, பொய்யான கோசங்களை கூறி மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய அரசியலால் பின்தங்கியுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க அடுத்த 05 வருடங்கள் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய இளைய தலைமுறையினரை உருவாக்குவதே தமது நோக்கம். இளைய தலைமுறையினரை சமூகத்துடன் இணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள பிரபல விடுதியொன்றில் நேற்றையதினம்(08) மாலை இடம்பெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த எமது நாடு, பொய்யான கோசங்களை கூறி மேற்கொள்ளப்பட்ட பாரம்பரிய அரசியலால் பின்தங்கியுள்ளது.கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க அடுத்த 05 வருடங்கள் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.