• Sep 20 2024

ரணிலுக்கு எதிராக கிளம்பியுள்ள தேரர்..! மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா.??samugammedia

Sharmi / Jun 14th 2023, 10:47 am
image

Advertisement

பௌத்த விகாரைகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகளை அரசாங்கம் துண்டித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் மீது சரமாரியான கேள்விகளை முன்வைத்து ஓமல்பே சோபித தேரர் குற்றம்சுமத்தியுள்ளார்.

மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த ஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம் சாட்டிய ஓமல்பே சோபித தேரர் சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மின்கட்டணங்களை அதிகரித்துள்ளபோதும் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள அவர்,

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆலயங்களிற்கான மின்கட்டணங்கள்  அதிகரிக்கப்பட்ட போது அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆலயங்களிற்கு சூரியசக்தியில் இயங்கும் மின்கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்ததாகவும் ஆனால் இதுவரை அவ்வாறான எதுவும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் உள்ள  பௌத்த ஆலயம் உட்பட் சில விகாரைகளுக்கான மின்இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணிலுக்கு எதிராக கிளம்பியுள்ள தேரர். மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா.samugammedia பௌத்த விகாரைகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகளை அரசாங்கம் துண்டித்துள்ள நிலையில் அரசாங்கத்தின் மீது சரமாரியான கேள்விகளை முன்வைத்து ஓமல்பே சோபித தேரர் குற்றம்சுமத்தியுள்ளார்.மின்கட்டணங்களை செலுத்தாத பௌத்த ஆலயங்களிற்கான மின் இணைப்பை இலங்கை மின்சார சபை துண்டித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.மின்கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதற்கான நிவாரணங்கள் எதனையும் அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம் சாட்டிய ஓமல்பே சோபித தேரர் சூரிய சக்தியில் இயங்கும் மின்கலங்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் மின்கட்டணங்களை அதிகரித்துள்ளபோதும் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள அவர், கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஆலயங்களிற்கான மின்கட்டணங்கள்  அதிகரிக்கப்பட்ட போது அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆலயங்களிற்கு சூரியசக்தியில் இயங்கும் மின்கலங்களை வழங்குவதாக தெரிவித்திருந்ததாகவும் ஆனால் இதுவரை அவ்வாறான எதுவும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டையில் உள்ள  பௌத்த ஆலயம் உட்பட் சில விகாரைகளுக்கான மின்இணைப்பை இலங்கை மின்சாரசபை துண்டித்துள்ளதாக ஓமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement