• Apr 01 2025

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Sharmi / Dec 11th 2024, 9:05 am
image

நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.

மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திரமாக, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்காததால், அந்த வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது.

மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர், மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் என்றும் நந்தன உதயகுமார குறிப்பிட்டார்.

அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது எனவும் அவ்வாறு ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் எனவும் அவர்  தெரிவித்தார். 



நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை. நாட்டில் மீண்டும் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான உண்மைகளை முன்வைப்பதற்காக கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரம் வாங்கும் தந்திரமாக, நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் கூட அதிகபட்ச கொள்ளளவில் இயங்காததால், அந்த வாரியத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வரும் மின் மாபியா மீண்டும் தலை தூக்கியுள்ளது.மின்கட்டண உயர்வுக்கு இந்த மின்சார மாபியா பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், நீர், மின்சாரம் மற்றும் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திறன் உள்ள நிலையில் தனியாரிடம் மின்சாரம் வாங்குவது பெரும் விரயம் என்றும் நந்தன உதயகுமார குறிப்பிட்டார்.அவ்வாறு மின்சார சபை அதிகாரிகள் செய்தால் அடுத்த வருடம் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வறண்ட காலநிலையில் மின்சாரத்தை கொள்வனவு செய்ய சபையிடம் பணம் இருக்காது எனவும் அவ்வாறு ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் நான்கு முதல் ஐந்து மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க நேரிடலாம் எனவும் அவர்  தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now