• Dec 12 2024

மரக்கறிகளின் விலைகள் மேலும் உயரும் அபாயம்..!

Sharmi / Dec 12th 2024, 11:39 am
image

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும்  கறி மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளன.

இதுவரை,  மிளகாய் 900 முதல் 1000 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 1000 முதல் 1200 ரூபாயாகவும், மொச்சை 800 முதல் 900 ரூபாயாகவும், மூட்டை கொச்சி காய் 2800 முதல் 3000 ரூபாயாகவும், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்து வருவதாகவும், காய்கறி பயிர்கள் அழிந்து வருவதால் மற்ற ஆண்டுகளை விட காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, நத்தார் பண்டிகை நெருங்கும் போது இந்த மரக்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

மரக்கறிகளின் விலைகள் மேலும் உயரும் அபாயம். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும்  கறி மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் எலுமிச்சம்பழம் ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளன.இதுவரை,  மிளகாய் 900 முதல் 1000 ரூபாயாகவும், பச்சை மிளகாய் 1000 முதல் 1200 ரூபாயாகவும், மொச்சை 800 முதல் 900 ரூபாயாகவும், மூட்டை கொச்சி காய் 2800 முதல் 3000 ரூபாயாகவும், மற்ற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்து வருவதாகவும், காய்கறி பயிர்கள் அழிந்து வருவதால் மற்ற ஆண்டுகளை விட காய்கறிகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, நத்தார் பண்டிகை நெருங்கும் போது இந்த மரக்கறிகளின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement