மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவாதனந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம்(15) செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலயம் இயங்கி வருகின்றது.
எமது கல்வி வலயத்தில் 23,338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். 1638 ஆசிரியர்கள் எமது கல்வி வலயத்தில் கல்வி புகட்ட வேண்டும்.
அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணித பாட ஆசிரியர்கள், விஞ்ஞானபாட ஆசிரியர்கள், ஆங்கிலமொழி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்டு வருகின்றன.
தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம். ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக வேண்டி மாத்திரம் 212 ஆசிரியர்களின் தேவை எமது வயலயத்தில் இருக்கின்றது.
அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலயம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டு.பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை. மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் 278 ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவாதனந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம்(15) செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலயம் இயங்கி வருகின்றது. எமது கல்வி வலயத்தில் 23,338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள். 1638 ஆசிரியர்கள் எமது கல்வி வலயத்தில் கல்வி புகட்ட வேண்டும்.அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணித பாட ஆசிரியர்கள், விஞ்ஞானபாட ஆசிரியர்கள், ஆங்கிலமொழி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்டு வருகின்றன.தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம். ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக வேண்டி மாத்திரம் 212 ஆசிரியர்களின் தேவை எமது வயலயத்தில் இருக்கின்றது. அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலயம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.