கடந்த காலபோக நெற் செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டாலும் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச் சபை ஈடுபட்டுள்ளதாககிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எமது விவசாயிகளை பெரியளவில் பாதித்திருக்கிறது.
இயற்கை அனர்த்தங்களினால் கடந்த காலபோகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடுகளை பெறுவதற்கு கமநல காப்புறுதிச்சபை மூலம் விண்ணப்பித்திருந்த போதும் அதில் அக்கறை செலுத்தவில்லை. கமநல காப்புறுதி சபை, கமநல சேவைகள் மூலம் பயிரழிவுகளின் விபரங்களை உள்வாங்குமாறு கமநல சேவை நிலையங்களை விவசாயிகள் வலியுறுத்தியதன் பிரகாரம் அவர்களும் முழுமையான விவசாயிகளின் பாதிப்பை பார்வையிடாது இது நோயினால் பாதிக்கப்பட்டது. இந்த அழிவுக்கான இழப்பீடு வழங்க முடியாது என சுற்றுநிருபம் குறிப்பிடுகின்றது. ஆகவேஇழப்பீடு வழங்க முடியாது என தெரிவிக்கின்றனர்.
ஆனால் கடந்த கால அரசாங்கத்திலும் இவ்வாறான அழிவுகள் நடைபெற்ற போது இழப்பீடுகள் கிடைத்தன.
தற்போது கமநல காப்புறுதிச்சபை தர மறுக்கின்றது.
தகவல் அறியும் சட்டம் மூலம் கமநல காப்புறுதிச்சபையிடம் இதுவரை பதிவு செய்யப்பட்ட அழிவு விபரங்கள் கோரியுள்ளேன்.
கடந்த காலங்களில் எவ்வாறு வயல் நிலங்கள் அனர்த்தத்திற்கு உள்ளானது என்ற விடயத்தை சமூக வலைத்தளங்கள் மூலமே அவதானிக்க முடிகின்றது.
கடந்த மூன்றாம் திகதி தேசிய சம்மேளனம் விவசாய அமைச்சரை சந்தித்திருந்தது.
அமைச்சரிடமும் குறித்த விடயத்தை தெரிவித்திருந்ததாகவும், விவசாயிகளின் பயிரழிவுக்கு கமநல காப்புறுதி சபை நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தத்தால் நெற் செய்கை பாதிப்பு; இழப்பீடுகள் கிடைப்பதில் சிக்கல். கடந்த காலபோக நெற் செய்கையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் அனர்த்தங்களினால் பாரிய பாதிப்பை எதிர்கொண்டாலும் சுற்றுநிருபத்தை காரணம் காட்டி இழப்பீடுகளை நியாயமாக கிடைக்காமல் செய்யும் செயற்பாட்டில் கிளிநொச்சி கமநல காப்புறுதிச் சபை ஈடுபட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் யதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.கிளிநொச்சியில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் எமது விவசாயிகளை பெரியளவில் பாதித்திருக்கிறது. இயற்கை அனர்த்தங்களினால் கடந்த காலபோகத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடுகளை பெறுவதற்கு கமநல காப்புறுதிச்சபை மூலம் விண்ணப்பித்திருந்த போதும் அதில் அக்கறை செலுத்தவில்லை. கமநல காப்புறுதி சபை, கமநல சேவைகள் மூலம் பயிரழிவுகளின் விபரங்களை உள்வாங்குமாறு கமநல சேவை நிலையங்களை விவசாயிகள் வலியுறுத்தியதன் பிரகாரம் அவர்களும் முழுமையான விவசாயிகளின் பாதிப்பை பார்வையிடாது இது நோயினால் பாதிக்கப்பட்டது. இந்த அழிவுக்கான இழப்பீடு வழங்க முடியாது என சுற்றுநிருபம் குறிப்பிடுகின்றது. ஆகவே இழப்பீடு வழங்க முடியாது என தெரிவிக்கின்றனர்.ஆனால் கடந்த கால அரசாங்கத்திலும் இவ்வாறான அழிவுகள் நடைபெற்ற போது இழப்பீடுகள் கிடைத்தன.தற்போது கமநல காப்புறுதிச்சபை தர மறுக்கின்றது. தகவல் அறியும் சட்டம் மூலம் கமநல காப்புறுதிச்சபையிடம் இதுவரை பதிவு செய்யப்பட்ட அழிவு விபரங்கள் கோரியுள்ளேன்.கடந்த காலங்களில் எவ்வாறு வயல் நிலங்கள் அனர்த்தத்திற்கு உள்ளானது என்ற விடயத்தை சமூக வலைத்தளங்கள் மூலமே அவதானிக்க முடிகின்றது.கடந்த மூன்றாம் திகதி தேசிய சம்மேளனம் விவசாய அமைச்சரை சந்தித்திருந்தது. அமைச்சரிடமும் குறித்த விடயத்தை தெரிவித்திருந்ததாகவும், விவசாயிகளின் பயிரழிவுக்கு கமநல காப்புறுதி சபை நியாயமான தீர்வை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.