• Apr 23 2025

படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியில்லை: அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது கொலை அச்சுறுத்தலே-அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம்..!

Sharmi / Apr 23rd 2025, 5:10 pm
image

அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டோருக்கான நீதிகிட்ட எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே மதவாதமே. தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி பண்டாரநாயக்க, ஜெயவர்தன சந்திரிகா, ராஜபக்சே வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.

தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.

தையிட்டி சட்ட விரோத கட்டடத்திற்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிசார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு; விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்று விடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படு கொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்து விட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்திற்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்தரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.

தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்க தொடங்கிவிட்டனர்.

இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாமமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்கள் நோக்கம் எனலாம்.

நீண்ட கால இன அழிப்பிற்கும், இறுதி இனப்படு கொலைக்கும், நில ஆக்கிரமிப்பிற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடை சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலி கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாள கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியில்லை: அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது கொலை அச்சுறுத்தலே-அருட்தந்தை மா.சத்திவேல் காட்டம். அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டோருக்கான நீதிகிட்ட எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவரால் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"நாட்டில் இனி இனவாதமும் மதவாதமும் இல்லை" எனக் கூறும் தற்போதைய ஜனாதிபதி தையிட்டியில் பேரினவாத மேலாதிக்க மனப்பான்மையுடனும் ஆக்கிரமிப்பு சிந்தனையுடனும் சட்டத்துக்கு விரோதமாக மக்கள் காணிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிட பிரச்சினையை பேரினவாத பிக்குகளின் கைகளில் ஒப்படைத்து பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் காலடியில் விழவைப்பதற்கு நினைப்பதும்; பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த இரண்டு வருட காலமாக போராடும் அரசியல் சக்திகளை அகற்றிட திட்டமிடுவதும் இனவாதமே மதவாதமே. தையிட்டியில் எழுந்துள்ள மக்களின் பிரச்சினை பேரினவாத அரசியலில் ஆணிவேரினால் தோற்றுவிக்கப்பட்டதே. அதனை மூடி மறைத்து அரசியல் பேசும் தற்போதைய ஜனாதிபதி பண்டாரநாயக்க, ஜெயவர்தன சந்திரிகா, ராஜபக்சே வழியில் வந்த தமிழர்களுக்கு எதிரான அரசியல்வாதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனலாம்.உள்ளூராட்சி மன்ற தேர்தல் அண்மித்து கொண்டிருக்கையில் கண்டி தலதா மாளிகையில் வைக்கப்படுள்ள புனித தந்தத்தினை பௌத்த மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தி அரசியல் செய்யும் ஜனாதிபதி வடக்கில் தையிட்டியில் அரசியல் நீதிக்காக போராடுபவர்களை குறுகிய அரசியல் நோக்கமும் கொண்ட அரசியல்வாதிகள் என அடையாளப்படுத்தி குறிப்பாக தெற்கின் மக்களுக்கு அவர்களை இனவாதிகள், மதவாதிகள் என காட்ட நினைப்பது அரசியல் வஞ்சக நோக்கத்துடனாகும்.தமிழர்களின் குரலாக கொழும்பு தலைநகரில் ஓங்கி குரல் கொடுத்த குமார் பொன்னம்பலம் அவர்கள் பட்டப்பகலில் கொழும்பு நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கான நீதி இன்னும் கிட்டவில்லை. அதே அரச பயங்கரவாதத்தால் எத்தனையோ பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான நீதி கிட்டும் என்பதற்கான எந்த விதமான அறிகுறியும் தென்படாத நிலையில் தையிட்டியில் அரசியல் செய்யும் குழுக்களை அகற்ற வேண்டும் எனக்கூறுவது பகிரங்க கொலை அச்சுறுத்தலாகவே கொள்ளல் வேண்டும்.தையிட்டி சட்ட விரோத கட்டடத்திற்கு எதிராகவும் நில மீட்புக்காகவும் கடந்த இரண்டு வருட காலமாக போராடுபவர்களை கடந்த காலங்களில் பொலிசார் அச்சுறுத்தி அடாவடித்தனம் புரிந்ததோடு; விசாரணை என பொலிஸ் நிலையங்களுக்கும் அழைத்ததுடன் நின்று விடாது நீதிமன்றத்திலும் நிறுத்தி போராட்டத்தை தொடருவதற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். எனினும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிரான உச்சக்கட்ட தொனியாகவே ஜனாதிபதியின் கூற்று அமைந்துள்ளது.இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்திய இனப்படு கொலையோடு தமிழர் தாயக அரசியல் அழிந்து ஒழிந்து விட்டது என நினைக்கும் பேரினவாதிகளுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் பேரினவாதத்திற்கு எதிராக நடக்கும் அரசியல் போராட்டங்களும் நீண்ட நாட்களாக தொடரும் காணாமலாக்கப்பட்டோரின் போராட்டத்தை முழுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு தையிட்டி போராட்டத்தில் தெரியும் அரசியல் தலைமைத்துவத்தையும், அது நாடாளுமன்றத்தில் எழுப்பும் குரலையும் பயங்கரவாத குரலாக சித்தரிக்க எடுக்கும் முயற்சிக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நன்கு பாடம் புகட்ட வேண்டும்.தமிழர்களின் அரசியலை அழிக்க பல்வேறு வடிவங்களில் இன அழிப்பை தொடர்ந்து இறுதியில் இனப்படுகொலை புரிந்தவர்கள் தொடர்ந்தும் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க படை தளங்களை விரிவாக்கி பலப்படுத்தியவர்கள் இறுதியில் தமது ஆக்கிரமிப்பு நோக்கத்தினை நிறைவேற்ற படையினரின் பாதுகாப்போடு பௌத்த சிங்கள அடையாளங்களை விதைக்க தொடங்கிவிட்டனர்.இது விடயங்களில் கடந்த காலங்களில் நேரடியாகவும் மறைமுகமாகும் அங்கீகாரம் அளித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணியினர் தற்போது தேசிய மக்கள் சக்தி முகத்தோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியலை அழித்திடும் அரசியலை வேகப்படுத்திட முகாமமைத்து அரசியல் யுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.இவர்கள் தமது அரசியலுக்கு எதிரானவர்கள் நினைப்பவர்களை அடக்குவதற்கு இனவாத சாயம் பூச முற்படுவதோடு இவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தையும் பாவிக்க தயங்க மாட்டார்கள். இதன் மூலம் தமிழர்களை அரசியல் நீக்கம் செய்வதே இவர்கள் நோக்கம் எனலாம்.நீண்ட கால இன அழிப்பிற்கும், இறுதி இனப்படு கொலைக்கும், நில ஆக்கிரமிப்பிற்கும், வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கும், பயங்கரவாத தடை சட்டம் தொடர்வதற்கும், பேரினவாத மதவாதிகள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் காரணமாக இருந்தவர்கள் தற்போது மேடை அமைத்து நீலி கண்ணீர் வடித்து எங்களுக்கு வாக்களித்தால் உங்களின் கண்ணீரை துடைப்போம் என்று கூறுவது மீண்டும் மீண்டும் தமிழர்களை அழிவுக்குள் தள்ளுவதற்கே.எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முதலை கண்ணீர் வடிப்பவர்களையும், தனது கட்சிக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் அரசியல் துரோகம் செய்பவர்களையும், அற்ப சலுகைகளுக்காக மறைமுகமாக தமிழர்களின் தேசியத்துக்கு எதிராகவும் செயல்படும் அரசியல் துரோகிகளையும் அடையாள கண்டு துடைத்தெறிந்து தமிழர் நிலம் காக்கவும் தேசியம் காக்கவும் துணிச்சலோடு குரல் எழுப்புவோர்க்கு எமது வாக்கு பலத்தை வெளிப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.தேசத்தின் ஒற்றுமையே தேசியத்தின் வலிமை என்பதை நினைவில் கொள்வோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement