என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, இரா. சாணக்கியன் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விமார்சனங்களுக்கு பதில் வழங்கும் முகமாக, இன்று(08.12.2023) நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன்,
என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள்.
ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.
கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.
எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறான நபர்களின் கதைகளுக்கு நான் பதில் கூறாமல் சென்றாலும், மக்கள் இதற்கான பதிலை எதிர்ப்பார்பதால் இங்கு இதனை முன்வைக்கின்றேன்.
இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.என்றார்.
என்னை விமர்சிக்கும் முட்டாள்களுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சபையில் சாணக்கியன் பதிலடி என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்றையதினம் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, இரா. சாணக்கியன் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.இந்நிலையில் குறித்த விமார்சனங்களுக்கு பதில் வழங்கும் முகமாக, இன்று(08.12.2023) நாடாளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் கருத்து தெரிவித்த இரா. சாணக்கியன், என்னை நோக்கி நேற்றைய தினம் ஆளும் கட்சியின் பிரதிநிதி ஒருவர் தகாத வார்த்தைகளை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கேள்விகளை என்னிடம் கேட்பதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் சென்று அவ்வாறான கேள்விகளை கேளுங்கள்.ஆளும் கட்சியின் இராஜாங்க அமைச்சர் கூறிய சில விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.இவர் ஒரு விஞ்ஞானி போல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். நான் கல்வி கற்றது சிங்கள பாடசாலை என தவறான கருத்துக்களை கூறியிருந்தார்.கண்டி திருத்துவ பாடசாலை மூவின மக்களும் கல்வி கற்கும் பாடசாலை. எனக்கு சிங்கள நண்பர்கள் இருக்கின்றனர் என கூறி இருந்தார்.எனக்கு அனைத்து மொழிகளை பேசும் நண்பர்கள் இருக்கின்றனர். இதை குறையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.இவ்வாறான நபர்களின் கதைகளுக்கு நான் பதில் கூறாமல் சென்றாலும், மக்கள் இதற்கான பதிலை எதிர்ப்பார்பதால் இங்கு இதனை முன்வைக்கின்றேன்.இவ்வாறான நபர்கள் கூறும் விடயங்களை சில தமிழ் ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. இவ்வாறான போலி விமர்சனங்களே என் வளர்ச்சிக்கு பிரதான காரணம்.என்றார்.