• Sep 19 2024

மாணவர்களின் விடைத்தாள்களை வைப்பதற்கு கூட இலங்கையில் இடமில்லை – அரசை கேவலப்படுத்திய எம்.பி!samugammedia

Sharmi / Apr 25th 2023, 11:34 am
image

Advertisement

உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தாமதம் அடைவதால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்வியமைச்சரிடம் விடைத்தாள்களை மதிப்பீட்டின் தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.

பரீட்சைகள் திணைக்களம் கல்வி திணைக்களம் என்பது வேறுவேறான இரண்டு திணைக்களங்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தில் ஆளணி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் கல்வி திணைக்களத்தில் உள்ளவர்களை கட்டணம் செலுத்தி பணிக்கு அமர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பரீட்சை திணைகள்தில் விடைத்தாள்களை வைப்பதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் முதலில் தாள்களை வைப்பதற்கு இடமொன்றை தேடிக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

11ஆம் ஆண்டு மாணவர்கள் அமருவதற்கு வகுப்பறைகள் இல்லாத நிலை இன்று காணப்படுவதாகவும் இவ்வாறான நிலைகள் முன்னெப்போதும் இலங்கையில் இடம்பெற்றதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் விடைத்தாள்களை வைப்பதற்கு கூட இலங்கையில் இடமில்லை – அரசை கேவலப்படுத்திய எம்.பிsamugammedia உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தாமதம் அடைவதால் மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினீ குமாரி விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.கல்வியமைச்சரிடம் விடைத்தாள்களை மதிப்பீட்டின் தாமதம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார்.பரீட்சைகள் திணைக்களம் கல்வி திணைக்களம் என்பது வேறுவேறான இரண்டு திணைக்களங்கள் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தில் ஆளணி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் கல்வி திணைக்களத்தில் உள்ளவர்களை கட்டணம் செலுத்தி பணிக்கு அமர்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.எனவே இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.பரீட்சை திணைகள்தில் விடைத்தாள்களை வைப்பதற்கு இடப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் முதலில் தாள்களை வைப்பதற்கு இடமொன்றை தேடிக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.11ஆம் ஆண்டு மாணவர்கள் அமருவதற்கு வகுப்பறைகள் இல்லாத நிலை இன்று காணப்படுவதாகவும் இவ்வாறான நிலைகள் முன்னெப்போதும் இலங்கையில் இடம்பெற்றதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement