• Aug 25 2026

எண்ணெய் ஒரு துளியும் கிடையாது-அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் ஈரான்!

Ziya / Aug 24th 2026, 9:47 am
image

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக வளைகுடாவில் இருந்து ஒரு துளி எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது.


ஈரானின் பொருளாதாரத்தை மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில், அதன் வர்த்தகப் பங்காளிகளையும் குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகளை இன்று ஆகஸ்ட் 24 முதல் அமெரிக்கா அமல்படுத்தத் தயாராகியுள்ளது.


அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட் இதனை “இதுவரை ஒரு எதிரி நாட்டுக்கு எதிராக திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதித் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். ஈரானுடன் வர்த்தக மற்றும் நிதித் தொடர்புகளைத் தொடரும் நாடுகளும் இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாஷிங்டன் எச்சரித்துள்ளது.


இதற்கு பதிலளித்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, பொருளாதாரப் போர் தொடர்ந்தால்,


“ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மட்டுமல்ல, பாரசீக வளைகுடாவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு துளி எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று எச்சரித்துள்ளார்.


மேலும், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எந்த நாடும் ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்பதாகக் கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த மோதலின் மையத்தில் இருப்பது ஹோர்முஸ் ஜலசந்தி. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்த கடல்வழியில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் உண்மையில் வளைகுடா எண்ணெய் ஏற்றுமதியை முடக்க முயன்றால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் அதிர்வு ஏற்படக்கூடும்.


எண்ணெய் ஒரு துளியும் கிடையாது-அமெரிக்காவை நேரடியாக எச்சரிக்கும் ஈரான் அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதலை தொடங்கத் தயாராகி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக வளைகுடாவில் இருந்து ஒரு துளி எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரானின் பொருளாதாரத்தை மேலும் தனிமைப்படுத்தும் நோக்கில், அதன் வர்த்தகப் பங்காளிகளையும் குறிவைத்து புதிய பொருளாதாரத் தடைகளை இன்று ஆகஸ்ட் 24 முதல் அமெரிக்கா அமல்படுத்தத் தயாராகியுள்ளது.அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட் இதனை “இதுவரை ஒரு எதிரி நாட்டுக்கு எதிராக திரட்டப்பட்ட மிகப்பெரிய நிதித் தாக்குதல்” என வர்ணித்துள்ளார். ஈரானுடன் வர்த்தக மற்றும் நிதித் தொடர்புகளைத் தொடரும் நாடுகளும் இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வாஷிங்டன் எச்சரித்துள்ளது.இதற்கு பதிலளித்த ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாயி, பொருளாதாரப் போர் தொடர்ந்தால்,“ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக மட்டுமல்ல, பாரசீக வளைகுடாவின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு துளி எண்ணெய்கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று எச்சரித்துள்ளார்.மேலும், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் எந்த நாடும் ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்பதாகக் கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த மோதலின் மையத்தில் இருப்பது ஹோர்முஸ் ஜலசந்தி. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு மிக முக்கியமான இந்த கடல்வழியில் ஏற்கனவே கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் உண்மையில் வளைகுடா எண்ணெய் ஏற்றுமதியை முடக்க முயன்றால், உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் அதிர்வு ஏற்படக்கூடும்.

Advertisement

Advertisement

Advertisement