• Dec 23 2024

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமானம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது!

Tamil nila / Dec 20th 2024, 9:33 pm
image

இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும், இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று வடமராட்சியில் தனது கற்றொழில் வாடியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்தியாவில் பிரதமர் மோடியை அந்தித்தபோது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


எமது மீனவர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறுகாரணமாக சென்றதற்கே மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும்,  கடூளிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கையில் இறமையுள்ள எமது கடற்பரப்பிற்க்குள் மீன்புடியில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றும், எல்லை தாண்டி வந்து இலக்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாக கடற்படை இந்த நாட்டிற்கு தேவைதானா எனவும் கேள்வி யெழுப்பினார்.

எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமானம் என்ற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது இந்தியாவிலிருந்து வந்து இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமானம் என்ற பேச்சே இருக்கக் கூடாது என வடமாகாண கடலோடிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளரும், இணைப்பாளருமான காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.இன்று வடமராட்சியில் தனது கற்றொழில் வாடியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,அண்மையில் இந்தியாவிற்கு சென்ற எமது ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க இந்தியாவில் பிரதமர் மோடியை அந்தித்தபோது எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் விடயம் மனிதாபிமானத்துடன் அணுகப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.எமது மீனவர்கள் எல்லை தாண்டி இயந்திர கோளாறுகாரணமாக சென்றதற்கே மியன்மாரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபா 5. இலட்சம் குற்றப்பணமும்,  கடூளிய சிறையும் விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று இலங்கையில் இறமையுள்ள எமது கடற்பரப்பிற்க்குள் மீன்புடியில் ஈடுபடும் எவராக இருந்தாலும் அவர்களுக்கும் இவ்வாறான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றும், எல்லை தாண்டி வந்து இலக்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாக கடற்படை இந்த நாட்டிற்கு தேவைதானா எனவும் கேள்வி யெழுப்பினார்.

Advertisement

Advertisement

Advertisement