• Nov 28 2024

கடந்த ஆண்டு இணையம் ஊடாக நடந்த 6,690 பாலியல் துஷ்பிரயோகங்கள்..! பாதுகாப்பு அமைச்சர் அதிர்ச்சித் தகவல்

Chithra / Jan 23rd 2024, 3:29 pm
image


 

கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன என பொது பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இணைய பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் சில வாரங்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு 6,690 இணையம் ஊடாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளன

இந்த புள்ளிவிவரங்கள் சிஐடி யிடம் முறைப்பாடு வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. 

இன்னும் பல இணைய குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்

இதேநேரம் சிவில் சமூக அமைப்புக்கள் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட தரப்பினரால் இது குறித்து வழங்கப்படும் திருத்தங்கள் பரிசீலிக்கப்படும் எனவும்,

இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் மேலும் திருத்தங்களை நாங்கள் கொண்டு வருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு இணையம் ஊடாக நடந்த 6,690 பாலியல் துஷ்பிரயோகங்கள். பாதுகாப்பு அமைச்சர் அதிர்ச்சித் தகவல்  கடந்த ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன என பொது பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்று இணைய பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இந்த ஆண்டின் முதல் சில வாரங்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட நிர்வாணப் புகைப்படங்கள் இணையத்தில் பரப்பப்பட்டுள்ளதுடன் கடந்த ஆண்டு 6,690 இணையம் ஊடாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடந்துள்ளனஇந்த புள்ளிவிவரங்கள் சிஐடி யிடம் முறைப்பாடு வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்டவை மட்டுமே. இன்னும் பல இணைய குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்இதேநேரம் சிவில் சமூக அமைப்புக்கள் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட தரப்பினரால் இது குறித்து வழங்கப்படும் திருத்தங்கள் பரிசீலிக்கப்படும் எனவும்,இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர் மேலும் திருத்தங்களை நாங்கள் கொண்டு வருவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement