• Nov 22 2024

வவுனியாவில் அரச- தனியார் பேருந்து சாரதிகளிடையே மோதல்...! நால்வர் வைத்தியசாலையில் அனுமதி...!samugammedia

Sharmi / Jan 23rd 2024, 3:20 pm
image

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்தின் ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்து தரிந்து நின்றுள்ளது.

இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் வருகை தந்து புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.

இதன் போது இரு பேருந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேருந்தின் மின்விளக்கும் உடைக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச மற்றும்  தனியார் பேருந்தின் நடத்துநர் , சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேருந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



வவுனியாவில் அரச- தனியார் பேருந்து சாரதிகளிடையே மோதல். நால்வர் வைத்தியசாலையில் அனுமதி.samugammedia இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்தின் ஊழியர்களுக்கிடையே இடம்பெற்ற ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பேருந்து தரிந்து நின்றுள்ளது. இதன் போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் வருகை தந்து புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக தரிந்து நின்றுள்ளது.இதன் போது இரு பேருந்தின் ஊழியர்களுக்கிடையே நேரசூசி தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் இ.போ.ச பேருந்தின் மின்விளக்கும் உடைக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இ.போ.ச மற்றும்  தனியார் பேருந்தின் நடத்துநர் , சாரதி என நால்வரும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இரு பேருந்தினையும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement