முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,
ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் எனது அரசியல் பணியை ஆரம்பித்து,
பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து, கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன்.
மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப்பெற்றன.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன்.
இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிலிருந்து திடீரென விலகினார் திலீபன் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதாவது,ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் எனது அரசியல் பணியை ஆரம்பித்து, பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து, கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப்பெற்றன.இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது