• Jun 26 2024

தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் திருமலை பாடசாலை மாணவிகள் சாதனை...!

Sharmi / Jun 17th 2024, 1:24 pm
image

Advertisement

பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டி நேற்றையதினம்(16) கண்டி பிலிமந்தலாவ மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. 

இப்போட்டியில் பங்குபற்றிய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை  பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்தவகையில், சி.ஹரினி 16 வயதின்கீழ் பங்குபற்றி (73 கிலோகிராம்) முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், எஸ்.கிஷோத்திகா 18 வயதின்கீழ பங்குபற்றி (93 கிலோகிராம்) இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், வி.பிரஷா 18 வயதின்கீழ் பங்குபற்றி (107 கிலோகிராம்) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். 

கே.உமாசுதன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் இவர்கள் குறித்த சாதனையை படைத்திருந்தனர்.

இந்நிலையில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தேசிய மட்ட பளு தூக்கும் போட்டியில் திருமலை பாடசாலை மாணவிகள் சாதனை. பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளு தூக்கும் போட்டி நேற்றையதினம்(16) கண்டி பிலிமந்தலாவ மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை  பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்தவகையில், சி.ஹரினி 16 வயதின்கீழ் பங்குபற்றி (73 கிலோகிராம்) முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தையும், எஸ்.கிஷோத்திகா 18 வயதின்கீழ பங்குபற்றி (93 கிலோகிராம்) இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், வி.பிரஷா 18 வயதின்கீழ் பங்குபற்றி (107 கிலோகிராம்) மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். கே.உமாசுதன் ஆசிரியரின் பயிற்றுவிப்பில் இவர்கள் குறித்த சாதனையை படைத்திருந்தனர்.இந்நிலையில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement