• Mar 22 2025

கஜேந்திரகுமார்-தவராசா இணைவுக்கு இதுதான் காரணம்: குணாளன் சுட்டிக்காட்டு..!

Sharmi / Mar 22nd 2025, 8:41 am
image

தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள  சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின்  தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து  வெளியேறிவருகின்றவர்கள்  கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாக சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகர்கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும்  நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், அதேபோன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால்  இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த, வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கஜேந்திரகுமார்-தவராசா இணைவுக்கு இதுதான் காரணம்: குணாளன் சுட்டிக்காட்டு. தமிழரசு கட்சியில் ஊடுருவியுள்ள  சிங்கள பேரினவாத தரப்பின் ஒற்றர்களின்  தமிழ்த்தேசிய விரோத செயற்பாடுகளின் காரணமாக அக்கட்சியிலிருந்து  வெளியேறிவருகின்றவர்கள்  கே.வி. தவராசா தலைமையிலான சனநாயக தமிழரசு கட்சியில் தொடர்ச்சியாக இணைந்து வருவதாக சனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகர்கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ்த்தேசிய சித்தாந்தத்தினை பலப்படுத்தும் வகையிலும் சிங்கள பேரினவாதத்தின் ஒற்றர்களால் அழிக்கப்பட்ட  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை மீள் உருவாக்கம் செய்யும் நோக்கிலும் சனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் இணைந்து பயணிக்கவுள்ளதாகவும்  நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் தமிழர் தாயகத்தில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், அதேபோன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாகவிருந்தால்  இக்கூட்டமைப்பின் ஊடாகவே நீதித்துறை சார்ந்த பிரமுகர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.அதேவேளை, தமிழ் மக்களின் நீண்டகால உரிமைப் போராட்டத்திற்கு முழுமையாக வலுச்சேர்க்கும் நோக்கில் இணைந்து பயணிக்கவுள்ள இக்கூட்டமைப்பில் நேர்மை மிகுந்த, வெளிப்படையான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற அனைத்து தமிழ்தேசிய தரப்பினரும் இணைந்து பயணித்து தமிழ்மக்களின் மனதை வெல்லவேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement