கடந்த காலத்தில் தட்டிலே வைத்து பிரதமர் பொறுப்பையும் ஜனாதிபதி பதவியையும் தந்த போதும், திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினாலும், திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலும் அந்த பொறுப்புக்களை நான் மறுத்தேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இடம்பெற்ற பிரசாக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தாமே நாட்டின் மாற்று சக்தி என்று கூறிக்கொள்கின்றவர்களும் ஜனாதிபதியின் ஆட்களும் என்னை விமர்சிக்கின்றார்கள்.
பாடசாலைகளை அபிவிருத்தி அடைய செய்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தபோதும் என்னை விமர்சித்தார்கள்.
நான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி அடையச் செய்வேன்.
76 வருட காலம் குறித்து பேசும் வாய்ச் சொல்லாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலை செய்யாதிருந்தனர்.
எனினும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டுக்காக சேவை செய்யும் முறையை மாற்றியமைத்தனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் நான் நாட்டை பொறுப்பேற்காததற்கு இதுதான் காரணம்-புத்தளத்தில் சஜித் வெளிப்படை. கடந்த காலத்தில் தட்டிலே வைத்து பிரதமர் பொறுப்பையும் ஜனாதிபதி பதவியையும் தந்த போதும், திருடர்களுடன் டீல் இல்லாத காரணத்தினாலும், திருடர்களுடன் சேர்ந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலும் அந்த பொறுப்புக்களை நான் மறுத்தேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.புத்தளத்தில் இடம்பெற்ற பிரசாக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.தாமே நாட்டின் மாற்று சக்தி என்று கூறிக்கொள்கின்றவர்களும் ஜனாதிபதியின் ஆட்களும் என்னை விமர்சிக்கின்றார்கள். பாடசாலைகளை அபிவிருத்தி அடைய செய்கின்ற வேலைத்திட்டத்தை முன்னெடுத்தபோதும் என்னை விமர்சித்தார்கள்.நான் அதிகாரத்திற்கு வந்தவுடன் அனைத்து பாடசாலைகளையும் அபிவிருத்தி அடையச் செய்வேன்.76 வருட காலம் குறித்து பேசும் வாய்ச் சொல்லாளர்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு வேலை செய்யாதிருந்தனர். எனினும், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் நாட்டுக்காக சேவை செய்யும் முறையை மாற்றியமைத்தனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.