• Apr 23 2026

உரிமைகளை உணர்ச்சியாக பேசியவர்கள் இன்று கூட்டாட்சிக்குள் வீழ்ந்து விட்டனர் - வாசுகி குற்றச்சாட்டு!

shanu / Apr 22nd 2026, 5:29 pm
image

தேசியம் பேசி தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் உணர்ச்சியாக பேசியவர்கள் எல்லாம் இன்று கூட்டாட்சி என்ற வட்டத்துள் வீழ்ந்து விட்டதாக  ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு  அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர்  வாசுகி சுதாகரன்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 


யாழ். ஊடக அமையத்தில் இன்று (22.04.2026) ஊடக சந்திப்பை முன்னெடுத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 


தமிழர் தாயகமெங்கும் இன்று படுகொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன் போதைப் பொருள் விற்பனை பாவனையும் தாராளாமான பரவிக்கிடக்கின்றது. இதை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பது கிடையாது. 


இதேநேரம் எமது அரசியல் கட்சிகளும் தமக்கிடையே ஒன்றுமை என்று கூறிக்கொண்டு கூட்டாட்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது எமது அரசியல் தரப்பினர் நடந்துகொண் முறைமையை பார்த்தபோது இதன் பிரதிபலிப்பை உணர முடிந்தது.


தமிழ் அரசியல் தாப்பினரது இவ்வாறான போக்கு எதிர்காலத்தில் பாரிய தாக்கங்களை எமது பிரதேசத்தில் உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தக்கிடமில்லை. 


ஆதனால் தான் நாம் கூறுகின்றோம் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொது அமைப்புகள் புலம்பெயர் அமைப்புகள் என அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி எமது பிரச்சினைகள் தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வை பெறும் நோக்கில் பயணிக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் விழிப்படைந்து தமது வகிபாகத்தை காட்ட முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உரிமைகளை உணர்ச்சியாக பேசியவர்கள் இன்று கூட்டாட்சிக்குள் வீழ்ந்து விட்டனர் - வாசுகி குற்றச்சாட்டு தேசியம் பேசி தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் உணர்ச்சியாக பேசியவர்கள் எல்லாம் இன்று கூட்டாட்சி என்ற வட்டத்துள் வீழ்ந்து விட்டதாக  ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான மேம்பாட்டு  அமைப்பின் வடக்கு கிழக்குக்கான பணிப்பாளர்  வாசுகி சுதாகரன்  குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (22.04.2026) ஊடக சந்திப்பை முன்னெடுத்து இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகமெங்கும் இன்று படுகொலைகளும் பெண்களுக்கெதிரான வன்முறைகளும் நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன் போதைப் பொருள் விற்பனை பாவனையும் தாராளாமான பரவிக்கிடக்கின்றது. இதை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பது கிடையாது. இதேநேரம் எமது அரசியல் கட்சிகளும் தமக்கிடையே ஒன்றுமை என்று கூறிக்கொண்டு கூட்டாட்சியை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். இந்திய துணை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது எமது அரசியல் தரப்பினர் நடந்துகொண் முறைமையை பார்த்தபோது இதன் பிரதிபலிப்பை உணர முடிந்தது.தமிழ் அரசியல் தாப்பினரது இவ்வாறான போக்கு எதிர்காலத்தில் பாரிய தாக்கங்களை எமது பிரதேசத்தில் உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தக்கிடமில்லை. ஆதனால் தான் நாம் கூறுகின்றோம் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது பொது அமைப்புகள் புலம்பெயர் அமைப்புகள் என அனைத்தையும் உள்ளடக்கிய வகையில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி எமது பிரச்சினைகள் தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வை பெறும் நோக்கில் பயணிக்க வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் விழிப்படைந்து தமது வகிபாகத்தை காட்ட முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement