கொழும்பு -வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ் ஆணையகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.
2025 ஏப்ரல் 2 ஆம் திகதி அதிகாலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த ஏதுவாக, இந்த பரிந்துரையை அவர் செய்துள்ளார்.
அத்துடன், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரையும் இடைநீக்கம் செய்ய பதில் பொலிஸ் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பதவிக்கு ஆபத்து கொழும்பு -வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ் ஆணையகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.2025 ஏப்ரல் 2 ஆம் திகதி அதிகாலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த ஏதுவாக, இந்த பரிந்துரையை அவர் செய்துள்ளார்.அத்துடன், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரையும் இடைநீக்கம் செய்ய பதில் பொலிஸ் அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.