• May 04 2025

சஜித்தின் பேரணியில் பட்டாசு கொளுத்திய மூவர் கைது..!

Sharmi / Sep 10th 2024, 5:08 pm
image

கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல்  பிரச்சாரக் கூட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 7 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கண்டி பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் சந்தேகநபர்கள் மூவரும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஜித்தின் பேரணியில் பட்டாசு கொளுத்திய மூவர் கைது. கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல்  பிரச்சாரக் கூட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 7 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாகவும், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கண்டி பிரதேசத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பிரகாரம் சந்தேகநபர்கள் மூவரும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now