• Feb 03 2025

வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை - அம்பலாந்தோட்டையில் பயங்கரம்

Chithra / Feb 3rd 2025, 7:03 am
image


வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்றுள்ளது.  

6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை - அம்பலாந்தோட்டையில் பயங்கரம் வீடு ஒன்றுக்குள் வைத்து மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தக் கொடூர சம்பவம் அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்றுள்ளது.  6 பேர் கொண்ட குழு வீடு ஒன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்களாவர்.ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement