• Apr 18 2026

கரடி வேஷம் போட்டு 1.41 இலட்சம் டொலர் மோசடி – மூவருக்கு சிறை

Aathira / Apr 18th 2026, 3:30 pm
image

கலிபோர்னியா மாநிலத்தில் வித்தியாசமான காப்புறுதி மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

சொகுசு கார்கள் மீது கரடி தாக்கியது போல நாடகம் ஆடி, சுமார் 1.41 இலட்சம் டொலர் காப்புறுதி பணத்தை மோசடி செய்ய முயன்ற மூவருக்கு நீதிமன்றம் 180 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2024 ஜனவரி 28ஆம் தேதி, லேக் அரோஹெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மீது கரடி புகுந்து சேதப்படுத்தியதாக கூறி, சம்பந்தப்பட்டவர்கள் காணொளி ஆதாரங்களையும் காப்புறுதி நிறுவனங்களுக்கு வழங்கினர்.

ஆனால் அந்த வீடியோக்களை ஆய்வு செய்த வனவிலங்கு நிபுணர்கள், அது உண்மையான கரடி அல்ல, கரடி வேஷம் போட்ட மனிதர்கள்தான் என்று கண்டுபிடித்தனர்.

இதையடுத்து “Operation Bear Claw” என்ற விசாரணை தொடங்கப்பட்டது. சந்தேகநபர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கரடி உடையும் கைப்பற்றப்பட்டது.

இதன் மூலம் மோசடி முயற்சி உறுதியாகி, சம்பந்தப்பட்ட மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்களுக்கு 180 நாட்கள் சிறைத்தண்டனையும், 2 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதிக்கப்பட்டது. 

கரடி வேஷம் போட்டு 1.41 இலட்சம் டொலர் மோசடி – மூவருக்கு சிறை கலிபோர்னியா மாநிலத்தில் வித்தியாசமான காப்புறுதி மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சொகுசு கார்கள் மீது கரடி தாக்கியது போல நாடகம் ஆடி, சுமார் 1.41 இலட்சம் டொலர் காப்புறுதி பணத்தை மோசடி செய்ய முயன்ற மூவருக்கு நீதிமன்றம் 180 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.2024 ஜனவரி 28ஆம் தேதி, லேக் அரோஹெட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் மீது கரடி புகுந்து சேதப்படுத்தியதாக கூறி, சம்பந்தப்பட்டவர்கள் காணொளி ஆதாரங்களையும் காப்புறுதி நிறுவனங்களுக்கு வழங்கினர்.ஆனால் அந்த வீடியோக்களை ஆய்வு செய்த வனவிலங்கு நிபுணர்கள், அது உண்மையான கரடி அல்ல, கரடி வேஷம் போட்ட மனிதர்கள்தான் என்று கண்டுபிடித்தனர்.இதையடுத்து “Operation Bear Claw” என்ற விசாரணை தொடங்கப்பட்டது. சந்தேகநபர்களின் வீட்டில் சோதனை நடத்தியபோது, கரடி உடையும் கைப்பற்றப்பட்டது.இதன் மூலம் மோசடி முயற்சி உறுதியாகி, சம்பந்தப்பட்ட மூவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். பின்னர், அவர்களுக்கு 180 நாட்கள் சிறைத்தண்டனையும், 2 ஆண்டுகள் நன்னடத்தை கண்காணிப்பும் விதிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement