• Apr 05 2025

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு..!!

Tamil nila / Feb 19th 2024, 7:43 pm
image

ஆராச்சிக்கட்டுவ - ஆனவிழுந்தாவ உப ரயில் நிலையத்திற்கு உட்பட்ட மய்யாவ பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலுடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- மூவர் உயிரிழப்பு. ஆராச்சிக்கட்டுவ - ஆனவிழுந்தாவ உப ரயில் நிலையத்திற்கு உட்பட்ட மய்யாவ பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த பயணிகள் ரயிலுடன், மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்று பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement