• Nov 28 2024

மூன்று அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ்! வெளியான அதிவிசேட வர்த்தமானி

Chithra / Aug 15th 2024, 8:28 am
image

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டமையால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டன.

இதன்படி, இந்த அமைச்சுப் பதவிகளை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

மூன்று அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் வெளியான அதிவிசேட வர்த்தமானி  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் மூன்று அமைச்சுப் பதவிகளை கொண்டு வந்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, சுற்றுலா மற்றும் காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய அமைச்சுப் பதவிகள் ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் முன்னர் இந்த அமைச்சுப் பதவிகளை வகித்து வந்த நிலையில், அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் பறிக்கப்பட்டமையால் அமைச்சுப் பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டன.இதன்படி, இந்த அமைச்சுப் பதவிகளை தனது பொறுப்பின் கீழ் கொண்டு வந்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement