• Jan 22 2025

பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளான வேன் - காயங்களுடன் உயிர்தப்பிய மூவர்

Chithra / Jan 19th 2025, 2:55 pm
image

 

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் பயணித்தவர்கள் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவருகிறது.

குறித்த வேன், சேருவில பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்தபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய மரம் ஒன்றுடன் மோதி வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளான வேன் - காயங்களுடன் உயிர்தப்பிய மூவர்  திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இருதயபுரம் பகுதியில் பாதையைவிட்டு விலகி சிறிய ரக வேன் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.வாகனத்தில் பயணித்தவர்கள் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்களென தெரியவருகிறது.குறித்த வேன், சேருவில பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்தபோது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறிய மரம் ஒன்றுடன் மோதி வயலுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement