தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதிசுண்டி குளம் சந்தி விஸ்வமடு பகுதியில் விசுவமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்று (15) இரவு வீதி சோதனையில் ஈடுபட்ட பொழுது.
தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார்.
தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்.
இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் அனைத்தும், இன்று (16 )கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ 35 பிரதான வீதிசுண்டி குளம் சந்தி விஸ்வமடு பகுதியில் விசுவமடு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை நேற்று (15) இரவு வீதி சோதனையில் ஈடுபட்ட பொழுது.தலை கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று சந்தேக நபர்களை வீதிச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிசார், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களை சோதனை இடுவதற்கு முற்பட்ட பொழுது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தமது கையில் இருந்த கண்ணாடி போத்திலால் தாக்கியுள்ளார்.தாக்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளார்.இச்சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் தடையப் பொருட்கள் அனைத்தும், இன்று (16 )கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.