• Jan 14 2025

உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் மீட்பு - சிக்கிய மூவர்

Chithra / Jan 14th 2025, 9:33 am
image


கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 

ராகம, படுவத்த பகுதியில் உள்ள பொலிஸ் வீதித்தடையில் பென்ஸ் கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட முயன்றபோது, பொலிஸ் அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தப்பிச் செல்லும் போது வாகனத்தை செலுத்திய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வீட்டை சோதனை செய்ததில், உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

வீடு சோதனையின் போது அத்துமீறி நடந்து கொண்ட வீட்டு உரிமையாளர், அவரது மனைவி மற்றும் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்தனர்.


உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் மீட்பு - சிக்கிய மூவர் கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து உரிமையை உறுதிப்படுத்த முடியாத மூன்று சொகுசு ஜீப் வண்டிகள் மற்றும் வெகன் ஆர் கார் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். ராகம, படுவத்த பகுதியில் உள்ள பொலிஸ் வீதித்தடையில் பென்ஸ் கார் ஒன்றை பொலிஸார் சோதனையிட முயன்றபோது, பொலிஸ் அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் திட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.தப்பிச் செல்லும் போது வாகனத்தை செலுத்திய நபர் குடிபோதையில் இருந்ததாகவும், கனேமுல்ல - கலஹிடியாவ பகுதியில் பென்ஸ் கார் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வீட்டை சோதனை செய்ததில், உரிமையை உறுதிப்படுத்த முடியாத வாகனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.வீடு சோதனையின் போது அத்துமீறி நடந்து கொண்ட வீட்டு உரிமையாளர், அவரது மனைவி மற்றும் வாகன சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஜனவரி 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.மீட்கப்பட்ட வாகனங்களின் பெறுமதி 120 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமென பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement