• Jan 14 2025

நாட்டில் இவ்வருடம் அதிகரித்த டெங்கு நோயாளர்கள்!

Chithra / Jan 14th 2025, 9:26 am
image


நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.

அத்துடன் 24 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 தொடக்கம் 4 வயதுக்கு இடைப்பட்ட இரு சிறுமிகள் உள்ளடங்களாக 20 பெண்களும் 4 ஆண்களும் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது  என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இவ்வருடம் அதிகரித்த டெங்கு நோயாளர்கள் நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,045 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.நாட்டில் கடந்த வருடத்தில் மாத்திரம் 49,877 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டனர்.அத்துடன் 24 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.1 தொடக்கம் 4 வயதுக்கு இடைப்பட்ட இரு சிறுமிகள் உள்ளடங்களாக 20 பெண்களும் 4 ஆண்களும் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையிலும் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது  என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement