• Sep 20 2024

கொழும்பில் மூன்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை- நடந்தது என்ன?

Tamil nila / Jan 17th 2023, 7:12 am
image

Advertisement

மூன்று தங்க நெக்லஸ்கள் மற்றும் 7500 ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே நேற்று  (16) தீர்ப்பளித்தார்.


நவம்பர் 1997 அல்லது அதற்கு அருகிலான 26 ஆண்டுகளுக்கு முன்பு கத்தி மற்றும் கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.40,000/- அபராதமும் விதித்தார்.


கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த மஞ்சுள சஞ்சீவா மற்றும் ஜெலாப்தீன் அலி கான் ஆகிய இருவருமே குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.


மூன்று பெண்களின் கழுத்தில் இருந்த, 11000/-, 48000/- மற்றும் ரூபா 8000/- பெறுமதியான மூன்று தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.


சட்டமா அதிபர் முதலில் 05 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த போதிலும், முதலாவது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கின் 5ஆவது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்திருந்தார். 3வது பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை எனத் தீர்மானித்த நீதிபதி, அவரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.


குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது எனத் தீர்மானித்த நீதிபதி, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.20000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

கொழும்பில் மூன்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை- நடந்தது என்ன மூன்று தங்க நெக்லஸ்கள் மற்றும் 7500 ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே நேற்று  (16) தீர்ப்பளித்தார்.நவம்பர் 1997 அல்லது அதற்கு அருகிலான 26 ஆண்டுகளுக்கு முன்பு கத்தி மற்றும் கைத்துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, ரூ.40,000/- அபராதமும் விதித்தார்.கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த மஞ்சுள சஞ்சீவா மற்றும் ஜெலாப்தீன் அலி கான் ஆகிய இருவருமே குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.மூன்று பெண்களின் கழுத்தில் இருந்த, 11000/-, 48000/- மற்றும் ரூபா 8000/- பெறுமதியான மூன்று தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றம் சுமத்தியுள்ளார்.சட்டமா அதிபர் முதலில் 05 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்த போதிலும், முதலாவது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவர் இல்லாமலேயே வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், வழக்கின் 5ஆவது பிரதிவாதி விசாரணையின் போது மரணமடைந்திருந்தார். 3வது பிரதிவாதி மீதான குற்றச்சாட்டை நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை எனத் தீர்மானித்த நீதிபதி, அவரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்தார்.குற்றம் சாட்டப்பட்ட மற்ற இருவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது எனத் தீர்மானித்த நீதிபதி, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.20000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement