• Nov 25 2024

குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள்; மக்கள் விடுத்த கோரிக்கை..!

Sharmi / Nov 23rd 2024, 10:18 am
image

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று(23)  கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் .எம். கனி தலைமையின் கீழ் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம் பெற்றது.

இதன் போது கிண்ணியா நகர சபை செயலாளர்,உலமா சபை சூறா சபை , கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள் மதரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த படகு பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்களாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய் உட்பட சுமார் 08 அப்பாவி உயிர்கள் பலி போனது. 

ஆனால் குறித்த குறிஞ்சாக்கேணி  பாலம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமை, கடந்த கால அரசியல்வாதிகளால் வெறும் அடிக்கல் நடப்பட்டு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியது.

இப் பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர்.

பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது.

எனவே இது விடயமாக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டார்.

மேலும் ஆளும் கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திர குறித்த பாலத்தில் பால புனரமைப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றையும் கடந்த காலத்தில் முன்வைத்திருந்தார். 

எனவே, அநுர குமார அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



குறிஞ்சாக்கேணி படகு விபத்து இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள்; மக்கள் விடுத்த கோரிக்கை. திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் மரணித்தவர்களின் மூன்றாவது வருட நினைவை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு இன்று(23)  கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச் .எம். கனி தலைமையின் கீழ் குறிஞ்சாக்கேணி பால முன்றலில் இடம் பெற்றது.இதன் போது கிண்ணியா நகர சபை செயலாளர்,உலமா சபை சூறா சபை , கிண்ணியா பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் உலமாக்கள் மதரஸா மாணவர்கள் உட்பட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த படகு பாதை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உள்ளடங்களாக பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய் உட்பட சுமார் 08 அப்பாவி உயிர்கள் பலி போனது. ஆனால் குறித்த குறிஞ்சாக்கேணி  பாலம் கடந்த பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமை, கடந்த கால அரசியல்வாதிகளால் வெறும் அடிக்கல் நடப்பட்டு ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சியது.இப் பாலத்தின் ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர். பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே இது விடயமாக தற்போதைய கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர அண்மையில் விஜயம் செய்து பார்வையிட்டார்.மேலும் ஆளும் கட்சியில் திருகோணமலை மாவட்டம் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவான வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை பிரதியமைச்சர் அருண் கேமச்சந்திர குறித்த பாலத்தில் பால புனரமைப்பு நிதி ஒதுக்கீடு தொடர்பிலான ஊடக சந்திப்பொன்றையும் கடந்த காலத்தில் முன்வைத்திருந்தார். எனவே, அநுர குமார அரசாங்கத்தில் இதனை முழுமையாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement