• May 17 2024

இன்று மாலை பல இடங்களில் இடியுடன் கூடிய மழை...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 3rd 2024, 8:51 am
image

Advertisement

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் .

சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் .

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை பல இடங்களில் இடியுடன் கூடிய மழை. வெளியான அறிவிப்பு.samugammedia கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மழையுடனான வானிலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இது தொடர்பில் இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுகிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யும் .சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் .மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement