• Sep 17 2024

திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு!

Chithra / Aug 14th 2024, 11:20 am
image

Advertisement


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.

சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.

சுமார் 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், சிறிது காலம் அணியின் தலைவராகவும் கடமையாற்றினார்.

இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி திருமதி அப்சரி திலகரத்ன ஆகியோரும்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


திலகரத்ன டில்ஷான் சஜித்துக்கு ஆதரவு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.சஜித் பிரேமதாசவின் நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் திலகரத்ன டில்ஷான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.சுமார் 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய திலகரத்ன டில்ஷான், சிறிது காலம் அணியின் தலைவராகவும் கடமையாற்றினார்.இதேவேளை, அண்மையில் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஹஷான் திலகரத்ன மற்றும் அவரது மனைவி திருமதி அப்சரி திலகரத்ன ஆகியோரும்  சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement