• Mar 04 2026

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர், உழவியந்திரங்கள் பறிமுதல்!

shanu / Jan 16th 2026, 12:47 pm
image

கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


கிளிநொச்சி பன்னங்கண்டி முரசு மோட்டை கண்டவளை பெரியபரந்தன்ஆகிய பகுதிகளில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் குறித்த டிப்பர் மற்றும் உழவுயந்திரங்கள் கிளிநொச்சி பொலிசாரால் பறி முதல் செய்யப்பட்டன. 


பறிமுதல் செய்யப்பட்ட தடையப் பொருட்களை  இன்றைய தினம்16.01.2026 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிசார் தெரிவித்துள்ளனர். 

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர், உழவியந்திரங்கள் பறிமுதல் கடந்த 24 மணி நேரத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  ஐந்து டிப்பர் வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஐந்தும் கிளிநொச்சியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிளிநொச்சி பன்னங்கண்டி முரசு மோட்டை கண்டவளை பெரியபரந்தன்ஆகிய பகுதிகளில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் குறித்த டிப்பர் மற்றும் உழவுயந்திரங்கள் கிளிநொச்சி பொலிசாரால் பறி முதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தடையப் பொருட்களை  இன்றைய தினம்16.01.2026 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  பொலிசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement