• Jan 26 2025

கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு!

Chithra / Jan 21st 2025, 3:37 pm
image


உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று இன்றையதினம் (21)  மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கிளாலியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தி வந்த டிப்பர் மடக்கிப் பிடிப்பு உரிய அனுமதிப்பத்திரமில்லாமல் கிளாலி பகுதியில் இருந்து வெள்ளை மணல் கடத்தி வந்த டிப்பர் ஒன்று இன்றையதினம் (21)  மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த டிப்பர் சட்டவிரோதமாக மணலை ஏற்றி வருவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement