பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், குறித்த வீதியில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது.
பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதிகளில் வௌ்ளநீர் வடிந்தோடியதைத் தொடர்ந்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டது.
இதன் காரணமாக பொலன்னறுவை - மனம்பிட்டிய ரயில் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொலன்னறுவை - மனம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.தொடர் மழை காரணமாக கடந்த 19ஆம் திகதி முதல் பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், குறித்த வீதியில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து பொலன்னறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான ரயில் சேவை கடந்த 19 ஆம் திகதி முதல் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்டது.பொலன்னறுவை மற்றும் மனம்பிட்டிய வீதிகளில் வௌ்ளநீர் வடிந்தோடியதைத் தொடர்ந்து போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக வீதி மீண்டும் திறக்கப்பட்டது.இதன் காரணமாக பொலன்னறுவை - மனம்பிட்டிய ரயில் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.