திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.
உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே நேற்று திறக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது.
உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22ம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகிறது.
இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திருமலையில் மூன்று தசாப்தங்களின் பின்னர் திறக்கப்பட்ட வீதி திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.உவர்மலை 22ம் படைப்பிரிவின் இராணுவப் படைத்தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே நேற்று திறக்கப்பட்டுள்ளது.ஆளுநர் அலுவலக வீதி வழியாக 22ம் படைப்பிரிவின் இராணுவ நூதனசாலையின் வாயிலில் இருந்து உவர்மலை மத்திய வீதியினை அடையக்கூடியதான வீதியானது கடந்த மூன்று தசாப்த காலமாக பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படாத நிலையில் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தது.உவர்மலை பகுதியின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள 22ம் படைப்பிரிவினை அடைவதற்கு மூன்று வீதிகள் காணப்படுகிறது.இருப்பினும் அவ் வீதிகளூடான மக்கள் போக்குவரத்தானது சில பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதியொன்று அண்மையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.