• Mar 14 2026

திருநெல்வேலி கொலைச்சம்பவம் - 15ம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

Ziya / Dec 4th 2025, 11:19 am
image

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் கைதான ஆறு பேரையும் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது 24 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.

பொலிஸாரின் தடுப்பு காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை பின் தொடர்ந்து  பயணித்த காரொன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஏழாலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.

பொலிஸ் தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில் ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதீக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவை மேலதீக நீதிவான் உசைன் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்தி அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


திருநெல்வேலி கொலைச்சம்பவம் - 15ம் திகதி வரை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம்  தொடர்பில் கைதான ஆறு பேரையும் எதிர்வரும் டிசம்பர் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது 24 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.பொலிஸாரின் தடுப்பு காவல் விசாரணையின் போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளை காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களை பின் தொடர்ந்து  பயணித்த காரொன்றும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஏழாலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டது.பொலிஸ் தடுப்பு காவல் விசாரணை முடிவுற்ற நிலையில் ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதீக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவை மேலதீக நீதிவான் உசைன் பிறப்பித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி சந்தி அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.இதேவேளை குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement