• Dec 18 2025

கொலையில் முடிந்த தகராறு; இருவர் பலி! நுரைச்சோலையில் பயங்கரம்

Chithra / Dec 4th 2025, 11:24 am
image


நுரைச்சோலை – நாவற்காடு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.


ஆணொருவரும் இரண்டு பெண்களும், ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 


இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு பதிவாகியுள்ளது.


சம்பவத்தில் 38 வயதுடைய ஆண் ஒருவரும் 35 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


நாவற்காடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் இதன்போது, கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொலையில் முடிந்த தகராறு; இருவர் பலி நுரைச்சோலையில் பயங்கரம் நுரைச்சோலை – நாவற்காடு பகுதியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.ஆணொருவரும் இரண்டு பெண்களும், ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு பதிவாகியுள்ளது.சம்பவத்தில் 38 வயதுடைய ஆண் ஒருவரும் 35 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நாவற்காடு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேகநபர் இதன்போது, கைது செய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement