• Nov 27 2024

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!samugammedia

mathuri / Jan 29th 2024, 6:33 am
image

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி  மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். 

மேலும், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யகூடிய சாத்தியம் காணப்படுவதோடு, சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. 

மேலும், மாத்தறை தொடக்கம் காலி ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இதேவேளை, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  காற்று வீசும். 

கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். 

எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதோடு பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 


இன்றைய வானிலை முன்னறிவிப்பு.samugammedia கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி  மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும், அனுராதபுரம், முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யகூடிய சாத்தியம் காணப்படுவதோடு, சப்ரகமுவ மற்றும்  மேல் மாகாணங்களின்  பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. மேலும், மாத்தறை தொடக்கம் காலி ஊடாக கொழும்பு வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இதேவேளை, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத்  திசையில்  காற்று வீசும். கொழும்பு தொடக்கம் புத்தளம் ஊடாக மன்னார் வரையிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில்  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதோடு பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement